தன்னை விட 42 வயது அதிகமான ஹீரோ பில் முர்ரேவை, 26 வயது நிரம்பிய பாடகி செலினா கோம்ஸ் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.

பாப் பாடல் உலகில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் பாடகி செலீனா கோம்ஸ். இவர் கடந்த சில வருடங்களாக பல பாடகர்களை காதலித்து வருவதாக வதந்திகள் வந்தது. ஏன், பிரபல பாப் பாடகர் ஜெஸ்டின் பீபருடன் சில நாட்கள் லிவிங்-டுகெதரில் இவர் இருந்ததாக கூட செய்திகள் வந்தது.

இந்நிலையில் தற்போது பாடகி செலீனா கோம்ஸ் செய்திருக்கும் செயல் எல்லோரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதாவது இவர் 68 வயது நிறைந்த ஹாலிவுட் நடிகர் பில் முர்ரே என்பவரை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் பிரபல ஆங்கில பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

செலினாவின் வயது 26. பிரபல நடிகர் முர்ரேவின் வயது 68. இவர்கள் இருவரும் எப்படி திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் இவர்கள் இருவரும் ஜோடியாக கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வந்திருந்தது மிகவும் குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)