நம்மில் பலரும் விரும்பிப் பார்க்கும் விளையாட்டுகளில் தற்போது www  போட்டிகளும் இடம்பெற்றுள்ளன.

அதில் இடம்பெறும் ஜான் சீன, ராக் உள்ளிட்டோரை அறிந்திராத இளசுகள் இல்லை என்று சொல்லலாம் அந்தளவுக்கு புகழ்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த www  போட்டியில் விளையாடி புகழ் பெண் வீராங்கனை ஆஷ்லே மாஸரோ. இவர் தனது இளம் வயதில் அதாவது 40 வயதை எட்ட இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மரணமடைந்துள்ளார்.

ஆஷ்லே மாஸரோ தனது 25 வயதில் www போட்டியில் பங்கேற்க தொடங்கினார். 2005 – 2008ம் ஆண்டு வரை www ரெஸ்லிங் போட்டிகளில் பங்கேற்ற ஆஷ்லே மாஸரோ ரெசல்மானியா 23 தொடரில் இறுதிப்போட்டி மெலினாவுக்கு எதிராக விளையாடி தோல்வியுற்றவர்.

2005ல் www போட்டி நிறுவனத்தின் சார்பாக பெண் போட்டியாளர்களை தேடும் போது ஆஷ்லே மாஸரோ அந்த போட்டியில் வெற்றி பெற்று றுறுநு போட்டிகளில் விளையாட தொடங்கினார்.

கடந்த 16ம் தேதி ஆஷ்லே மாஸரோ லாங்க் தீவில் உள்ள வீட்டில் உயிரிழந்து கிடந்தார். அவர் யாரேனும் கொலை செய்திருப்பார்களா என போலீஸார் வீசாரித்ததில் யாரும் அவரை கொலை செய்யவில்லை இயற்கையாகவே உடல்நல பிரச்னையால் இறந்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)