அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 58ஆவது படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விக்ரம். தொடர்ந்து படத்தின் கதைக்கு ஏற்ப தனது உடல் எடையை கூட்டி குறைத்து நடித்து வருவதில் மிகவும் முக்கியமானவர். ஐ, அந்நியன், பிதாமகன், ராஜபாட்டை, தெய்வ திருமகள், தாண்டவம், பீமா என்று பல படங்களில் நடித்துள்ளார்.

கடந்தாண்டு விக்ரம் நடிப்பில் ஸ்கெட்ச் மற்றும் சாமி ஸ்கொயர் ஆகிய படங்கள் வெளியானது. எனினும், ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. இப்படங்களைத் தொடர்ந்து துருவ நட்சத்திரம்இ கடாரம் கொண்டான், மகாவீர் கர்ணா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இயக்குனர் அஜய் ஞானமுத்து உடன் இணைந்து விக்ரம்58 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது.
வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாக உள்ளது. செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் மற்றும் வைகம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. தற்போது ப்ரீ புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையில், இன்று வெளியாகியுள்ள போஸ்டரில், இப்படத்தில் விக்ரம் நடிக்கும் கதாபாத்திரத்தின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், பல்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)