ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ஒரு ராக்கெட் வந்து விழுந்தது. அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் அது விழுந்தது.

இந்த ராக்கெட் வீச்சில் யாரும் பாதிக்கப்படவில்லை. தாக்குதலுக்கு யாரும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும்  கிழக்கு பாக்தாத்தில் இருந்து ராக்கெட் வீசப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது.

அந்த பகுதியில், ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் ஆதிக்கம் இருப்பது குறிப்பிடத்தக்கது. வளைகுடா பகுதியில், போர்க்கப்பல்களையும், விமானங்களையும் அமெரிக்கா குவித்துள்ள நிலையில், இந்த ராக்கெட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.

(Visited 1 times, 1 visits today)