இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலையடுத்து கொழும்பு, நீர்கொழும்பு பிரதேசங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடன் தங்கியிருந்த ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் அகதிகள் வடமாகாணத்தில் குடியேற்றப்பட்டு வருகின்றனர்.

சுமார் ஆயிரத்தி ஐறுபேரில் நூற்றியம்பது பேர் வவுனியாவில் பூந்தோட்டம் அகதி முகாமில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் நான்கு குடும்பங்களைச் சேர்ந்த பதின்மூன்று அகதிகள் இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் குடியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பதின் மூன்றுபேரும் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதற்கு முன்னதாக தங்களை யாழ் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)