நான் இப்போது திருகோணமலையில் தங்கியுள்ளேன் .கொழும்பு வந்ததும் கட்சியுடன் பேசவுள்ளேன் .பின்னர் ஒரு தீர்மானத்தை எடுப்போம் இவ்வாறு அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

தமக்கெதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் இன்று தொலைபேசியின் ஊடாக சம்பந்தனுடன் பேசினார் அமைச்சர் ரிஷார்ட் . அப்போது இவ்வாறு குறிப்பிட்ட சம்பந்தன் மேலும் கூறியதாவது ,

நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நானும் அறிந்தேன்.ஆனால் கட்சி உறுப்பினர்களுடன் இது பற்றி பேச வேண்டும்.அவர்களின் கருத்துக்களையும் உள்வாங்க வேண்டும்.அதன் பின்னர் ஒரு முடிவை எடுப்போம்.கொழும்பு வந்தவுடன் நான் உங்களுடன் பேசுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் சம்பந்தன் எம் பி .

இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்களின்படி நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக ரிஷார்ட்டுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அக்கட்சி எடுக்குமென அறியமுடிந்தது.

(Visited 1 times, 1 visits today)