ஹேக்கர்கள் ஒரே ஒரு கால் மூலம் வாட்ஸ்ஆப்பில் ஊடுருவும் அபாயம் உள்ளதால் அனைத்து பயனாளர்களும் உடனடியாக அப்டேட் செய்யுதுகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களில் ஒன்று வாட்ஸ்ஆப். இந்தியாவில் கோடிக்கணக்கான வாட்ஸ்ஆப் பயனாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் வாட்ஸ் அப்பில் ஹேக்கர்கள் ஊடுருவ முயல்வதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்டு வாட்ஸ் ஆப் எண்ணுக்கு கால் செய்யும் ஹேக்கர்கள் அதன் மூலம் அவர்களைக் கண்காணிக்கும் சாப்ட்வேரை மொபைலில் இன்ஸ்டால் செய்கிறார்கள். அதற்குப் பின் மொபைல் தொடர்ந்து ஹேக்கர்களால் கண்காணிக்கப்படும்.

எனவே அனைத்து வாட்ஸ்ஆப் பயனாளர்களும் உடனடியாக அப்டேட் செய்துகொள்ளுமாறு அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தற்போது கிடைக்கும் புதிய வாட்ஸ்ஆப் அப்டேட்டில் அந்த ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் அம்சம் உள்ளது எனவும் கூறியுள்ளது

(Visited 1 times, 1 visits today)