மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் சபை, உலகக் கிண்ண கிரிக்கட் தொடருக்கான 10 பேர் கொண்ட மேலதிக வீரர்கள் கொண்ட பட்டியில், கிரன் பொலார்ட் மற்றும் ட்வைன் ப்ராவோ ஆகியோரை இணைத்துள்ளது.

அவர்களில் ப்ராவோ கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்துடன் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து உத்தியோகபூர்வமாக ஓய்வு பெற்றார்.

அத்துடன் அவர் 2014ம் ஆண்டுக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகளுக்காக அவர் எந்த ஒருநாள் போட்டியிலும் விளையாடி இருக்கவில்லை.

பொலார்டுக்கு 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாத்தக்குப் பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

எனினும் இதுவரும் ஐ.பி.எல் தொடரில் விளையாடி சிறப்பாக விளையாடி இருந்தார்கள்.

இந்தநிலையில் அவர்களையும் உள்ளடக்கி, உலகக்கிண்ணத் தொடருக்கான மேற்கிந்திய தீவுளின் மேலதிக கிரிக்கட் வீரர்களது பட்டியல் வெளியாக்கப்பட்டுள்ளது.

உலக கிண்ணத் தொடருக்கான 15 பேர் கொண்ட மேற்கிந்திய தீவுகளின் குழாம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, தற்போது பயிற்சிகளை நடத்தி வருகிறது.

(Visited 1 times, 1 visits today)