ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஓன்று இன்று புத்தளம் கொழும்பு முகத் திடலில் நடைபெற்றது.

ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்த இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை, புத்தளம் பெரிய பள்ளிவாசல் என்பவற்றுடன் இணைநது புத்தளம் நகர சபைத் தலைவர் இணைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிகளவிலான பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், ஆகாயப் படையினரின் பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான பல்வேறு சுலோகங்களையும் சுமந்தவாறு ஊர்வலவமாகச் சென்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் ஒன்று கூடினர்.

(Visited 1 times, 1 visits today)