யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையினை இன்று வியாழக்கிழமை காலை முதல் முன்னெடுத்தனர்.

எதிர்வரும் 20ஆம் திகதியின் பின்னர் பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் நடைபெறவிருப்பதால் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் வேண்டுகோள் விடுக்கப்பட்டமைக்கு அமைவாகவே இவ்வாறு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

(Visited 1 times, 1 visits today)