உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட 1100 பேர் தமது சொந்த இடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டுமென சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை இன்று வியாழக்கிழமை இந்த விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளது.

தற்காலிக இடங்களில் தங்கியுள்ள பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது நாட்டின் பல பிரதேசங்களில் வன்முறைச்சம்பவங்கள் பதியாகியுள்ளமையினால் பெரும் அச்சத்திற்கு மத்தியில் வாழ்கின்றனரென்றும் சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்தோடு அவர்கள் உணவு, நிரந்தர மற்றும் பாதுகாப்பான உறைவிடம் இல்லாது துன்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலசலகூட வசதிகள் இல்லாமையினால் ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒரே மலசலகூடத்தினை பாவிக்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு அவசர சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாகவும் கூறப்படுகிறது.

எனவே அவர்களுக்கு தேவையான பாதுகாப்பான இருப்பிடம், உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமையென்றும் அந்த சபை வலியுறுத்தியுள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இலங்கைக்கு வந்துள்ள மக்களும் இந்த தாக்குதல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளதோடு,அவர்களும் தற்காலிக இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தங்களது நாடுகளில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டு மன வேதனைகளுக்கு உள்ளான மக்கள், வலிகளிலிருந்து மீண்டு இலங்கையில் பாதுகாப்பாக வாழமுடியுமென்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போது தங்களின் நாட்டில் அனுபவித்ததைப் போன்றதொரு அச்சமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனரென்றும் சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய தலைவர் பிராஜ் பட்நாய்க் தெரிவித்துள்ளா

(Visited 1 times, 1 visits today)