நடிகையாவதற்கு முன்பு விமான பணிப்பெண்ணாக இருந்தவர் மந்தனா கரிமி. இவர் இடையிடையே மாடலிங் செய்து வந்தார். பின்னர் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். மும்பையில் செட்டில் ஆன அவருக்கு திருமணமான 5 மாதங்களில் பிரச்சனை ஏற்பட்டு கணவரை பிரிந்தார்.

கணவரும், அவரின் குடும்பத்தாரும் மந்தனாவை கொடுமைப்படுத்தி, தாக்கி, வீட்டை விட்டு விரட்டி விட்டதாக செய்திகள் வெளியாகின. அவரை நடிப்புக்கு முழுக்கு போடுமாறும் அவர்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர்.

தற்போது தனியாக இருக்கும் மந்தனா பிகினி உடையில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த நெட்டிசன்களோ, நீங்கள் எல்லாம் ஒரு இஸ்லாமிய பெண்ணா, புனித ரமலான் மாதத்தில் இப்படியா வீடியோ வெளியிடுவது என்று விளாசினார்கள்.

இவர் இந்தியில் வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை மந்தனா கரிமி. ஈரானிய அப்பாவுக்கும், இந்திய அம்மாவுக்கும் பிறந்தவர் மந்தனா. மும்பையில் தங்கி நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

(Visited 1 times, 1 visits today)