ஹொலிவூட்டின் மார்வெல் சூப்பர் ஹீரோக்களுக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவர்களின் படங்கள் வசூல் ரீதியில் பெரும் வெற்றி பெற்று வருகின்றன. இந்நிலையில் மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைத்து ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படம் எடுக்கப்பட்டது.

இதற்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்தின் வெற்றியால், அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட்டன. சூப்பர் ஹீரோக்களை மிஞ்சும் வகையில் தானோஸ் என்ற பிரம்மாண்ட வில்லனை, அவெஞ்சர்ஸ் மூன்றாம் பாகத்தை எடுத்திருந்தனர்.

அவனை சூப்பர் ஹீரோக்கள் எப்படி ஒன்று சேர்ந்து அழிக்கிறார்கள் என்பதைக் கருவாகக் கொண்டு ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ என்ற பெயரில் 4ஆம் பாகத்தை எடுத்தனர். இதுவே இந்த சீரியஸின் இறுதி அத்தியாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் படம் வெளியாகி, உலகம் முழுவதும் பெரும் வெற்றியுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. வசூல் ரீதியில் புதிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது 2.5 பில்லியன் டாலர் வசூலை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் ஈட்டியுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.18,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் நம்பர் ஒன் பாக்ஸ் ஆபிஸ் இடத்தில் ‘அவதார்’ திரைப்படம் உள்ளது.

அதன் சாதனையை முறியடிக்க அவெஞ்சர்ஸ் 4ஆம் பாகத்திற்கு, இன்னும் 280 மில்லியன் டாலர் தேவைப்படுகிறது. எனவே அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் புதிய வசூல் சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)