பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவாக ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி உள்ளது.

தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கமல் தீவிர அரசியலில் ஈடுபட்டதால் இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனை யார் தொகுத்து வழங்கப்போகிறார் என்ற சந்தேகம் கிளம்பியது. இந்நிலையில் கமலை தொகுத்து வழங்குவது உறுதிபடுத்தும் வகையில் 3வது சீசனுக்கான புரமோவில் கமல் இடம்பெற்றுள்ளார்.

தற்போது பிக்பாஸ் 3வது சீசனில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த சீசனில் கலந்து கொள்ள பல பிரபலங்களின் பெயர் அடிபட்டு வரும் நிலையில், இதில் பிரபல தொலைக்காட்சியின் பாடல் நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருந்த திருநங்கை சாக்ஷி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என உறுதியான தகவல் வருகிறது.

(Visited 1 times, 1 visits today)