தமிழ் சினிமாவில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் குவித்த டாப் 10 படங்களின் பட்டியலில் அஜித்தின் விஸ்வாசம் 8 ஆவது இடம் பிடித்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் எத்தனையோ படங்கள் வெளியாகி வருகிறது. அதில், பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாகவும் அமைகிறது. இதில், ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜய்இ விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என்று மாஸ் ஹீரோக்களின் படங்களும் அடங்கும். தற்போது வரும் சினிமாவை பார்க்கும் போது ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கு இணையாக பல படங்கள் வருகிறது. இந்த நிலையில், தமிழில், அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்களின் பட்டியலை இங்கு காண்போம்.

2.0 – ரூ. 800 கோடி (கணிப்பு – விக்கிபீடியா தகவல்)

எந்திரன் – ரூ.290 கோடி (ரூ.2.9 பில்லியன் விக்கிபீடியா)

கபாலி – ரூ.285 கோடி

சர்கார் – ரூ.260 கோடி (விக்கிபீடியா தகவல்)

மெர்சல் – ரூ.260 கோடி (கணிப்பு – விக்கிபீடியா தகவல்)

ஐ – ரூ.243 கோடி

பேட்ட – ரூ.225 கோடி

விஸ்வாசம் – ரூ.200 கோடி (கணிப்பு – விக்கிபீடியா தகவல்)

காலா – ரூ.160 கோடி (கணிப்பு – விக்கிபீடியா தகவல்)

தெறி – ரூ.154 கோடி

இவ்வளவு ஏன் டிரைலரில் அதிக முறை பார்க்கப்பட்ட படங்களில் தல அஜித்தின் விஸ்வாசம் முதலிடம் பிடித்துள்ளது. அதோடு, இப்படத்தின் டிரைலரை 30 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர். தமிழ் படங்களின் டிரைலரை அதிக முறை பார்த்த 6 முக்கிய படங்களின் பட்டியலில் அஜித்தின் விஸ்வாசம் தான் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)