ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று ரியல் மாட்ரிட். கிறிஸ்டியானோ ரொனால்டோ, பயிற்சியாளர் ஷினேடின் ஷிடேன் ஆகியோர் வெளியேறிய பின், அந்த அணி தடுமாற ஆரம்பித்தது.

இதனால் ஷிடேனை மீண்டும் பயிற்சியாளராக நிமியத்துள்ளது. கடைசி கட்டத்தில் அவரால் சிறப்பான ஆணியை உருவாக்க முடியவில்லை.

தற்போது 2018-19 சீசன் முடிவடைந்துள்ளது. ஒவ்வொரு அணிகளும் வீரர்கள் டிரான்ஸ்பர் பணியில் ஈடுபட தொடங்கியுள்ளது. ரியல் மாட்ரிட் மீண்டும் சிறப்பான அணியை கட்டமைக்க 14 வீரர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இதில் காரேத் பெலே, ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், கெய்லர் நவாஸ் ஆகியோர் முன்னணி வரிசையில் உள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)