மொறட்டுவ நகரத்திலிருந்து 05 கிலோமீற்றர் தூரத்தில், ஹொரலவல்ல மீனவக்கிராமம் அமைந்திருக்கிறது. சிங்கள மக்கள் பெரும்பான்மையினரானாலும் ஆங்காங்காங்கே தமிழ், முஸ்லிம் குடும்பங்களும் வசிக்கின்றன.

120 குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் மீன்பிடி பிரதான ஜீவனோபாயமாக இருக்கிறது. முழு மையாக கடற்தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் மக்கள் கடற்கொந்தளிப்பு மற்றும் மாரிகாலங்களில் கடுமையான வருமான இழப்பை எதிர்கொள்வதால், இக்காலப்பகுதியில் தங்கள் அன்றாட வாழ்வு பெரும் போராட்டமாகிறது என்கின்றனர்.இயற்கைச் சீற்றங்களால் உண்டாகும். இழப்புகளுக்கு அரச நிவாரணங்கள் முறையாகக் கிடைக்கப்பெறுவதில்லை என்கின்றனர். இது தொடர்பாக பிரதேசவாசியான பிரேமகுமாரி கூறும்போது, ”மழைக்காலங்களில் எம்மால் கடலுக்கு செல்லமுடியாது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் குறைந்தது 10 நாட்கள் கடலுக்குச் செல்வதே பெரும்பாடு, இக்காலப்பகுதியில் பல குடும்பங்களில் உணவுக்கே திண்டாட்டமாக இருக்கும். அரசாங்கம் இக்காலப்பகுதியில் மானியங்கள் வழங்கினால் உதவியாக இருக்கும் என்கிறார்.” எங்கள் வீடுகளுக்கு வாக்குக்காக மட்டுமே அரசியல் வாதிகள் வருகின்றனர். எமது பிரச்சனைகள் பற்றி கூறினாலும் பயனில்லை. சமுர்த்தி நிவாரணம் இன்றுவரை எமக்கு எட்டாக்கனிதான் என்றார்.

கடலிலிருந்து மிக அண்மையாக 100 மீற்றர் தூரத்தில் இவர்களது வீடுகள் உள்ளமையால் கடற்கொந்தளிப்பு காலங்களில் மேலேழும் அலைகள் வீடுகளுக்குள்ப் புகுந்து கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக அப்பிரதேசவாசி அன்டனியுடன் பேசியபோது ”எங்களுக்குள்ள தீர்க்கப்பட வேண்டிய முதல்ப்பிரச்சினை இது 10 வருடங்களுக்கு முன் இப்பிரச்சினை எமக்கு இருந்திருக்கவில்லை. கடற்கரையோரத்தில் அதிக மணல் இருந்ததால் அப்பகுதி உயரமாக இருந்தது. போட்சிற்றி நிர்மாணப்பணிகள் ஆரம்பித்ததன் பின்னர் எங்களது கடற்கரையில் மணல் அள்ள ஆரம்பித்தார்கள். இதன் விளைவால் கடல் நீர் குடிமனைகளுக்குள் வருகிறது, இது தொடர்பாக எங்கள் பிரதேச செயலாளருக்குத் தெரிவித்தோம் அவர்களுக்கு நேரில் வந்த பார்க்க கூட நேரமில்லை என்றால் மக்கள் என்ன செய்வது? என்றார்.

ஹொரலவல்ல கடற்கரை எப்போதும் மீனவர்களால் சூழ்ந்திருக்கிறது. கடலுக்குச் செல்பவர்கள் வருபவர்கள் என எப்போதும் பரபரப்பான சூழலை காணமுடிகிறது. பெரும்பாலான படகுகள் மாலை 5மணியளவில் கடலுக்கு புறப்பட்டு மீண்டும் மறுநாள் அதிகாலையில் கரைதிரும்பும், படகுகள் கரை திரும்பும் போது கடற்கரையில் வெளிச்சம் அவசியம் கடந்த 6 மாதங்களாக ஹொரலவல்ல கடற்பிரதேசம் இருள்மண்டியிருக்கிறது. இங்கிருந்த மின்விளக்குகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் அதிகாலை நள்ளிரவில் கரையேறும் படகுகள் விபத்துகளில்ச் சிக்கி சேதமடைகின்றன. கம்பத்தில் மின்விளக்குகளை பொருத்துமாறு பலதடவைகள் கோரிக்கை வைத்தும் கடற்தொழில் அமைச்சால் எந்த நிவாரணமும் கிடைக்கப்பெறவில்லை என்கின்றனர் பிரதேசமக்கள்.

 

டீனு ஜான்சி

(Visited 1 times, 1 visits today)