அமெரிக்காவின் கணினி வலையமைப்பை இணையவழி தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக, அந்த நாட்டில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான நிறைவேற்று உத்தரவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சாதனங்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எந்த வெளிநாட்டு நிறுவனத்தின் சாதனங்களால் ஆபத்து ஏற்படும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் அவர் சீனாவின் ஹுஆவேய் நிறுவனத்தை இலக்கு வைத்தே இந்த தடையை ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)