ரிசாட் பதியுதீன் முஸ்லிம் பயங்கரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளமைக்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றிடம் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், போதிய ஆதாரங்கள் இருப்பதன் காரணமாகவே தாம் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர தீர்மானித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை ஒன்றிணைந்த எதிரணியின் சார்பில் கொண்டுவந்தால், அது இன்னும் பெறுமதியானதாக இருக்கும் என்று கருதுவதாகவும் ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

ரிசாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்றையதினம் சபாநாயகரிடம் கையளிக்க அவர் எதிர்பார்த்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)