காரைதீவு நிருபர்

கல்முனையில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஒருவர் அப்பகுதி இளைஞர்களால் தாக்கப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழல் தோன்றியிருந்தது.

இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இராணுவத்தினர் கல்முனையில் உள்ள அனைத்து வீதிகளிலும் தற்போது ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று மாலை கல்முனையில் இளைஞர்கள் தங்களது பிரதேசத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வீதியால் வந்த ஒருவர் அந்த இளைஞர்களை விசாரித்துவிட்டுச் சென்றுள்ளார்.

அதன் பின்னர் சற்று தொலைவில் சென்று ஏன் அந்த இளைஞர்கள் அங்கு நிற்கின்றனர் என பிறரிடத்தில் வினவிய போதே அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முறுகல் நிலை தோன்றியது.

இதனைத்தொடர்ந்து கல்முனையில் பல வீதிகளிலும் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

(Visited 1 times, 1 visits today)