‘தெறி’இ ‘மெர்சல்’ ஆகிய படங்களை அடுத்து இந்த வெற்றிக் கூட்டணி தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளன. தற்போது விஜய்யின் 63வது படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இப்படம் கண்டிப்பாக இவர்களின் கூட்டணியில் வந்த முந்தைய படங்களை விட அதிக மெர்சலாக இருக்கும் என்கின்றனர்.

இந்தப் படத்தில் முதன்முதலாக நடிகர் விஜய் ஒரு விளையாட்டு பயிற்சியாளராக நடிக்கிறார். மேலும் இவருடன் சிந்துஜா, யோகி பாபு, கதிர் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் இப்படத்திற்காக நான்கு பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது. அவைகள்: ‘வெறி’, ‘வெறித்தனம்’, ‘மைக்கேல்’, ‘கேப்டன் மைக்கேல்’ போன்றவைகளில் கூட ஒரு பெயர் இருக்கலாம் என்கின்றனர்.

(Visited 1 times, 1 visits today)