நடிகர் அஜித், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இயக்குனர் போனி கபூர், இந்தப் படம் மட்டுமல்லாமல் இதற்கடுத்ததாக தொடர்ந்து 3 படங்கள் அஜித்தை வைத்து தயாரிக்கவுள்ளார். இந்த தகவலை போனி கபூரே தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

ஆனால் ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு அடுத்ததாக வேறொரு தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ளதாகவும், அதற்காக ரூபாய் 60 கோடியை சம்பளமாக வாங்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் கோலிவுட்டில் வலம் வருகின்றன. மேலும் இந்த சம்பள தொகையை ‘விஸ்வாசம்’ பட தயாரிப்பு நிறுவனம் சத்ய ஜோதி பிலிம்ஸே தரும் பட்சத்தில் அவர்களது தயாரிப்பிலேயே நடிக்கும் திட்டம் வைத்துள்ளாராம் அஜித்.

(Visited 1 times, 1 visits today)