இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் 64 ஆவது படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்தைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் தனது 63ஆவது படமான இன்னும் டைட்டில் வைக்கப்படாத தளபதி63 என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தில், விஜய்யுடன் இணைந்து நயன்தாரா, விவேக், கதிர், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷரூப், வர்ஷா போலம்மா, ரெபா மோனிகா ஜான், இந்துஜா ரவிச்சந்திரன், ஆனந்தராஜ், தேவதர்ஷினி ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வரும் அக்டோபர் 27ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விஜய்யின் 64ஆவது படம் குறித்து தகவலும் வெளியாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கப்போவதாக தகவல் வெளியான நிலையில், இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாக செய்தி வெளியாகி வருகிறது. இவர் மாநகரம்இ அவியல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது கார்த்தியின் கைதி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையில் இவரது கதை ஒன்று விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும், ஆதலால், விஜய்யின் 64ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)