ஐபிஎல் 2019 சீசன் இறுதிப் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் ஹிட்மேன் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் – தல எம்எஸ் டோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் பலப்பரீட்சை நடத்தின.

இதில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்று கோப்பை 4-வது முறையாக கைப்பற்றியது. இந்த நான்கு முறையும் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹிட்மேன் ரோகித் சர்மாவே இருந்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் கோப்பையை நான்கு முறை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

மேலும், டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2009-ம் ஆண்டு கில்கிறிஸ்ட் தலைமையில் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இடம்பிடித்திருந்தார். அதன்பின் 2013, 2015, 2017, 2019 ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக கோப்பையை கைப்பற்றியுள்ளார்.

இதன்மூலம் ஐந்து முறை கோப்பையை முத்தமிட்ட ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)