நடிகர் பார்த்திபன் மகளும், உதவி இயக்குநருமான கீர்த்தனாவுக்கும், படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் மகனான அக்‌ஷய்க்கும் இன்று திருமணம் முடிந்தது.

சென்னை ராஜ அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த இவர்களின் திருமணத்தின் நெருங்கிய உறவினர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கீர்த்தனா மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நடச்சத்திரமாக நடித்திருந்தார். தற்போது மணிரத்னம் இயக்கும் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகின்றார். விரைவில் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளார்.
விஜய்சேதுபதி நடித்த பீட்ஷா படத்தை, அக்‌ஷய் இந்தியில் இயக்கியுள்ளார். கீர்த்தனாவுக்கு, அக்‌ஷய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரின் வீட்டாரும் இதற்கு சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதனிடையே இவர்கள் இருவீட்டார் சம்மதத்துடன் இன்று மணமக்களாக கை கோர்த்துள்ளனர். திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
(Visited 194 times, 1 visits today)