இந்திய சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் உடல் நலக்குறைவால் நெல்லையில் காலமானார். அவருக்கு வயது 75.

1944 செப்டம்பர் 26-ல் பிறந்த தோப்பில் முகம்மது மீரான், கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினத்தைச் சேர்ந்தவர்.

சாய்வு நாற்காலி நாவலுக்காக 1997 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். 5 புதினங்கள், 6 சிறுகதைகள், சில மொழிபெயர்ப்பு நூல்களை முகம்மது மீரான் எழுதியுள்ளார்.

ஒரு கடலோர கிராமத்தின் கதை நாவல் மூலம் கடலோர கிராமத்தின் அழகியலை, குமரி மாவட்ட முஸ்லிம்களின் வாழ்வியலை அச்சு அசலாகப் பதிவு செய்த படைப்பாளி. மூடத்தனங்களை தோலுரித்த எழுத்துப் போராளியாகப் பார்க்கப்பட்டவர் தோப்பில் முகமது மீரான்.

தமிழ் எழுத்துலகமே அவருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.

இன்று மாலை 5 மணிக்கு அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இன்று மாலை 3.30 வரை அவரது நெல்லை இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது

(Visited 1 times, 1 visits today)