சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிய ‘Mr Local’  திரைப்பட ட்ரைலர் வெளியாகியுள்ளது.

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர்.லோக்கல்’. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சதீஷ், யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே,.ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் வருகிற மே 17 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா ஆதி இசையமைக்கிறார்.

காதல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் ஒரு சிங்கிள் நாளை வெளியாவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்நிலையில், ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த இந்த படத்தின் ட்ரைலர்  ட்ரைலர் வெளியானது.

(Visited 1 times, 1 visits today)