இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘பாகுபலி’ என்ற ஒரு படத்தின் மூலம் உலகளவில் பேசப்பட்டவர் நடிகர் பிரபாஸ். இந்தப் படத்தை அடுத்து இவருக்கு எல்லா மொழியிலும் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது நடிகர் பிரபாஸ் நடித்து வரும் ‘சாஹோ’ படத்துக்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் படம் வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் வெளியாகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. படத்தை இயக்குனர் சுஜீத் இயக்கி வருகிறார்.

‘பாகுபலி 2’ திரைப்படம் ஜப்பானில் நல்ல வரவேற்பைப் பெற்றதால், ‘சாஹோ’ படத்தையும் ஜப்பானிய மொழியில் டப்பிங் செய்து வெளியிட தயாரிப்புத் தரப்பு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் வெளியான ஒரு சில வாரங்கள் கழித்தே ஜப்பானில் வெளியாகும். படத்தை விளம்பரம் செய்ய பிரபாஸ் ஜப்பான் பயணப்படுவார் என்றும் தெரிகிறது.

இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார். மேலும் படத்தில் அருண் விஜய், மந்திரா பேடி, லால், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷங்கர்-எஹ்சான்-லாய் கூட்டணி இசையமைத்துள்ளனர். படத்தில் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடித்துள்ளார். ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சாஹோ’. படத்தின் பட்ஜெட் ரூ. 300 கோடி என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகை ஈவ்லின் சர்மா . இந்திய ஜெர்மன் பாரம்பரியத்தை கொண்டவர் ‘டர்ன் லெஃப்ட்’ என்னும் ஆங்கில படத்தில் அறிமுகமானவர். பல ஹிந்தி படங்களில் நடித்து இருந்தார் . இப்போது பிரபாஸுடன் தெலுங்கில் அறிமுகமாகியுள்ள அவர் கடற்கரை கிளிவேஜ் காட்டுவது போல செம்ம கவர்ச்சியில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)