கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ என்ற படத்தின் மூலம் 1996ல் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தபு. இந்தப் படம் இன்னும் தமிழ் சினிமாவில் பேசப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் நடிகை தபுவின் நடிப்பு சிறப்பாக இருந்தது. அப்படத்தில் இடம் பெற்ற ‘முஸ்தபா முஸ்தபா’ என்ற பாடல் காலத்தால் என்றும் அழியாத பாடலாகும்.

அதையடுத்து நடிகை தபு மணிரத்னம் இயக்கத்தில் ‘இருவர்’ என்ற படத்திலும்  ராஜீவ் மேனன் இயக்கத்தில் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதையடுத்து நடிகை தபு, தெலுங்கு மற்றும் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் கடந்த 2007 க்கு பிறகு அவர் நடிக்கவில்லை.

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்தார். தற்போது நடிகை தபு, மீண்டும் இயக்குனர் திரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதன் அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை தபு, அல்லு அர்ஜூனுக்கு அம்மாவாக நடிக்கிறாராம்.

(Visited 1 times, 1 visits today)