48 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 20 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

இதேவேளை கடந்த சில தினங்களாக மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளினால் அதிகமான விபத்துக்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இக்காலப்பகுதிக்குள் 3,036 வாகனங்கள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 941 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)