ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக, இன்று திருப்பதிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

குடும்பத்தினருடன், வழிபாடு செய்வதற்காக இன்று காலை 11.30 மணிக்கு சிறப்பு விமானத்தில் ரேனிகுண்டா விமான நிலையத்தில் இறங்கும் ஜனாதிபதி , அங்கிருந்து திருமலைக்கு செல்லவுள்ளார்.

நாளை அதிகாலை 3 மணிக்கு திருமலையில் நடைபெறும், சுப்ரபாத சேவையில் ஜனாதிபதி குடும்பத்தினருடன் ஏழுமலையானை வழிபாடு செய்யவுள்ளார்.

அதன் பின்னர், திருமலையில் தங்கி ஓய்வெடுத்த பின்னர், நாளை இரவு 7.30 மணியளவில் அங்கிருந்து புறப்படுவார்.

நாளை இரவு பெங்களூ ர் வழியாக இலங்கை திரும்பவுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)