அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ச இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்.

கோட்டாபயவை அவரது ஆதரவாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் திரண்டு வரவேற்றனர்.

“நாட்டைக் காத்த தலைவர் வாழ்க!”, “எதிர்கால ஜனாதிபதி வாழ்க!!” என்று கோஷங்களை எழுப்பி கோட்டாபயவை வரவேற்றனர் அவரது ஆதரவாளர்கள்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ச அமெரிக்காவில் தங்கி நின்ற வேளை அங்கு அவருக்கு எதிராக இரண்டு வழக்குகள் தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)