நோபால் சர்ச்சை குறித்து நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி ஒரு ஓவரில் 18 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது

இந்த நிலையில் கடைசி ஓவரில் ஒரு பந்து நோபால் என ஒரு அம்பயரால் அறிவிக்கப்பட்டு பின்னர் இன்னொரு அம்பயரால் நோபால் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதனை வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி களத்திற்கு சென்று நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும் அந்த பந்து நோபாலாக அறிவிக்கப்படவில்லை
.
இந்த நிலையில் போட்டியின் நடுவே களத்திற்குள் புகுந்து நடுவருடன் வாக்குவாதம் செய்த தோனிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டது. ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக தோனிக்கு 50% அபராதம் விதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதுக் குறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் விதிமுறைகளை மீறியதால் போட்டி ஊதியத்தில் 50 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுகிறது. தோனி ஐபிஎல் விதிமுறைகள் 2.20 வின்படி லெவல் 2 குற்றம் செய்தவராக அறியப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது, தோனி ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. தோனி செய்தது தவறு என்றால் அம்பையர் செய்தது தவறில்லையா எனப் பலரும் சமூகவலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தோனி லெவெல் 2 விதிமீறலை முதல்முறை செய்ததால் அவருக்குக் குறைந்தபட்ச அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 1 times, 1 visits today)