நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டுவரப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தை காரணம் காட்டி இந்தப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.

எஸ்.பி.திஸாநாயக்க, பந்துல குணவர்தன, திலங்க சுமதிபால ஆகியோர் இதில் கலந்துகொண்டனர் .

இதேவேளை, நிதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேறினால் நாடாளுமன்றம் கலையும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(Visited 1 times, 1 visits today)