தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க வேண்டுமென்ற முனைப்போடு செவ்வாய் அன்று நடக்கவிருக்கும் போட்டியை எதிர்கொள்ளும். அந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த சீசனில் சென்னை அணி சொந்த மண்ணில் இதுவரை ஒரு தோல்வியை கூட சந்திக்கவில்லை. பயிற்சிக்கு நடுவே சென்னை அணியினர் கவலை ஏதுமில்லாமல், ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுடன் விளையாடி வருகின்றனர். சிஎஸ்கே பகிர்ந்துள்ள வீடியோ ஒன்றில், கேப்டன் தோனி மற்றும் அணியில் சிலர் ஜடேஜாவின் புதிய ஸ்டைலை கிண்டல் செய்தனர்.

“ஒருநாள் ‘பிரௌன் மேன்’ (Brown Mane)  ஜடேஜாவுக்கு எல்லோரும் ஹெலோ சொல்லுங்கள். ##WhistlePodu #Yellove” என்று சிஎஸ்கே ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பகிரப்பட்டுள்ளது.

ஜடேஜாவின் புதிய நிற தாடியை அணியினர் கிண்டலடித்தனர். ஒரு சிலர் அதை இழுத்துப் பார்த்தனர்.

ஐந்து போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி ஐந்தில் நான்கு போட்டிகள் வென்றுள்ளது. ஆனால், அதிக ரன் ரேட்டால் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

https://twitter.com/i/status/1114856067442200576

சனிக்கிழமை சென்னை அணி பஞ்சாபை வீழ்த்தியது, ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா ராஜஸ்தானை வீழ்த்தியது. வெற்றி பெற்ற இரு அணிகளும் செவ்வாயன்று சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன.

இரு அணிகளிலும் ஸ்பின்னர்கள் பலம் வாய்ந்தவர்களாக உள்ளனர். ஆனால், எந்த அணி வெற்றி பெற போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

(Visited 1 times, 1 visits today)