இரவில் நம்மை பாடாய் படுத்தும் வறட்டு இருமலை தடுக்க வேண்டுமா? இதோ சில இயற்கையான டிப்ஸ்!.

* பொதுவாக பலரும் சந்திக்கும் ஓர் ஆரோக்கிய பிரச்சனை தான் வறட்டு இருமல். வறட்டு இருமலானது சளி அல்லது கோழை உற்பத்தியின் மூலம் ஏற்படுவதில்லை.

* இந்த வகை இருமல் மூக்கு அல்லது தொண்டையில் ஏற்பட்ட வைரஸ் நோய்த்தொற்றின் மூலம் உருவாவது. வறட்டு இருமல் தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் தொடர்ச்சியாக இருமல் வரும்.

வறட்டு இருமலை தடுக்க சில இயற்கை வழிகள்:

1) வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடித்து வந்தால், வறட்டு இருமலில் இருந்து உடனடி நிவாரணம் தரும்.

2) துளசிக் கொழுந்தை இஞ்சி சேர்த்து அரைத்து தேனில் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் காணாமல் போகும்.

3) ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டுக் கொண்டால், வறட்டு இருமல் உடனே நின்றுவிடும்.

4) ஏலக்காய், சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் குணமாகும்.

5) கிராம்பினை பொடி செய்து பனங்கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து குடிக்க வறட்டு இருமல் நிற்கும்.

6) பாலில்,தேன், மஞ்சள்தூள், மிளகு பொடி கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் குறையும்.

7) வெதுவெதுப்பான உப்புதண்ணீரில் வாய் கொப்பளித்தால் தொண்டையில் இருக்கும் வைரஸ் கிருமி அழிக்கப்பட்டு, வறட்டு இருமல் நிவாரணம் அடையும்.

8) கற்பூர இலையை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை பருகி வர வறட்டு இருமல் குணமடையும்.

(Visited 1 times, 1 visits today)