இலங்கையில் மாறிமாறி வந்த சிங்கள அரசாங்கங்களால் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத்தமிழினப்படுகொலை ஆதாரங்களாக இருக்கும் நிழற்படங்களை சேகரித்து அதன் வரலாற்று தகவல்களுடன் 2013ம் தொடக்கம் உலக மக்களின் மனச்சாட்சியை உறுத்தி ஆதரவை பெறும்வகையில் மனித உரிமைச்செயற்பட்டாளர் கஜன் பார்வைக்கு வைத்து வருகின்றார்.

தற்பொழுது ஈழத் தமிழர்களுக்காக உங்கள் இதயத்தைத் திறவுங்கள் என்ற தொனிப் பொருளில் ஐநா மனித உரிமை அமர்வு நடைபெற்ற ஜெனிவாவிலும் நேற்று சுலத்தூணிலும் இன்றும் நாளையும் சுவிஸ் சூரிச் தொடரூந்து நிலையத்துக்கு அருகிலும் பார்வைக்கு வைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதை சுவிஸ் சூரிச் மக்கள் பார்வையிட்டு வருகின்றார்கள்.

(Visited 1 times, 1 visits today)