ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கிளை அலுவலகம் ஒன்றை இலங்கையில் அமைக்க முடியாதென இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் .

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை அதன் ஆணையாளர் மிச்செல் பாச்லெட் புதன்கிழமை சமர்ப்பித்தார்.
குறித்த அறிக்கை தொடர்பாக இலங்கை சார்பில் கருத்து தெரிவித்த போதே திலக் மாரப்பன இவ்விடயத்தை குறிப்பிட்டார்.

அத்தோடு இலங்கை குறிப்பிட்ட கால எல்லைக்குள் சகல விடயங்களையும் செயற்படுத்த வேண்டுமென அழுத்தம் கொடுப்பது சிக்கலில் முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை இறைமையுடைய நாடு என்ற வகையில் அதற்கேற்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு பல்லின மத கலாசார உணர்வுகள் கொண்ட நாடாகவும் இலங்கை உள்ள நிலையில் அவற்றை பாதுகாக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கையின் நீதி துறை மற்றும் புலன்விசாரணை தொடர்பான ஆற்றலை மேம்படுத்துவதற்கு உதவியளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்

(Visited 1 times, 1 visits today)