வங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனில் தலைமறைவாக இருந்த வைர வியாபாரி நிரவ் மோடி கைது என தகவல்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி வரை கடன் பெற்ற திருப்பியளிக்காமல் வெளிநாடு தப்பி சென்றதாக தொழிலதிபர் நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்‌ஷி ஆகியோரின் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தனித்தனியே முறைகேடு வழக்கு தொடுத்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமாக இந்தியாவில் இருக்கும் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இதனை தொடர்ந்து கடந்த அக்டோபர் 25-ஆம் நாள் நீரவ் மோடிக்கு சொந்தமாக ஹாங்காங்கிலுள்ள ரூ. 255 கோடி சொத்துக்களும் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டதின் கீழ் முடக்கப்பட்டது.

இதையடுத்து, 14 ஆயிரம் கோடி ரூபாய் பஞ்சாப் நேசனல் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் வைர வியாபாரிகளும் உறவினர்களுமான நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டனர். நிரவ் மோடி, லண்டனில் வெஸ்ட் என்ட் பகுதியில், சோகோ என்ற இடத்தில் அடுக்குமாடி சொகுசு குடியிருப்பில் வசித்து வருவதாக, டெய்லி டெலிகிராஃப் பத்திரிகையின் இணையதளத்தில் வீடியோவுடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், நிரவ் மோடி ஹேண்டில்பார்   மீசை வைத்துக்கொண்டு, சற்று பெருத்து சட்டென்று அடையாளம் காண முடியாத வகையில் இருக்கிறார் என தகவல்கள் வெளியானது.

இதை தொடர்ந்து, நிரவ் மோடிக்கு எதிராக, லண்டனில் உள்ள, வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 18 ஆம் தேதி, கைது வாரன்ட் பிறப்பித்தது. இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தனர். அவரை விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். நிரவ் மோடி கைதை தொடர்ந்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Visited 1 times, 1 visits today)