பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், மதுபாலா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அக்னி தேவ்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’. பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். காமெடி கதாபாத்திரத்தில் சதீஷ் நடித்துள்ளார்.

ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜனா ஒளிப்பதிவு செய்துள்ளார். சீன்டோ ஸ்டூடியோ சார்பில் ஜே.பி.ஆர் இந்த படத்தை தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து புரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி படம் வருகிற மார்ச் 22-ம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாவது டிரைலர் இன்று வெளியாகியுள்ளது.

(Visited 1 times, 1 visits today)