கிறிஸ்ட்சர்ச்சில் மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய வங்கதேச கிரிக்கெட் அணி வீரர்கள் பத்திரமாக தாயகம் திரும்பினர்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்தி துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிர் இழந்தனர். தவிர, பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நியூசிலாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்ற வங்கதேச அணி வீரர்கள் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மசூதியில் வங்கதேச கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 17 பேர் மதிய நேர வழிபாட்டுக்காக சென்றனர். ஆனால் அவர்கள் பத்திரமாக தப்பி சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால், நியூசிலாந்து, வங்கதேச அணி பங்கேற்கயிருந்த கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வங்கதேச அணியைச் சேர்ந்த வீரர்கள், இன்று தாக்கா வந்தடைந்தனர்.

இதுகுறித்து மகமதுல்லா கூறுகையில், ‘ஒரே ஒரு விஷயம் தான் என்னால் சொல்ல முடியும். உண்மையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். உங்களின் வேண்டுதல் தான் நாங்கள் இன்று உயிரோடு நாடு திரும்பியுள்ளோம். எங்களுக்குள் எப்படி உள்ளது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.’ என்றார்.

(Visited 1 times, 1 visits today)