ஐ.பி.எல். பயிற்சியின் போது காலில் விழவந்த ரசிகருடன் தோனி ஓடிப்பிடித்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த ஐ.பி.எல். போட்டியில் மூன்றாவது முறையாக கோப்பை வென்றது அனைவருக்கும் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்தது.

மார்ச் 23 ஆம் திகதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொள்கிறது. இந்த வருட ஐபிஎல் தொடரை பலரும் யார் வெல்வார் என கணித்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்த பருவத்தில் பட்டத்தை வெல்ல அனைத்து முரண்பாடுகளையும் மீறியது. ஏலத்திற்குப் பிறகு, விமர்சகர்கள் அவர்களை ஒரு மூத்த பக்கமாக பெயரிட்டனர், ஆனால் எம்.எஸ். தோனி சற்று மேலே நின்று அணிக்கு வெற்றிகரமான பருவத்திற்கு வழிவகுத்தார்.

அணியில தனது கேப்டனை போலவே மற்ற வீரர்களும் ஒருவராக சிந்தித்து செயல்பட்டு வெற்றியை கண்டனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் கலந்து கொள்ளாத சென்னை அணி கேப்டன் தோனி, சென்னை பயிற்சியில் சேர்ந்தார்.

இந்நிலையில், தோனியின் மீதுள்ள பாசத்தில் ரசிகர்கள் பலமுறை மைதானத்திற்குள்ளே நுழைந்து அவரது காலை தொட்டு வணங்கி சென்றிருக்கிறார்கள். சமீபத்தில் நாக்பூரில் நடைபெற்ற போட்டியின் போது ரசிகர் ஒருவர் தோனியை கட்டிப்பிடிக்க மைதானத்துக்குள் ஓடிவர ரோகித் சர்மாவுக்குப் பின்னால் தோனி ஒளிந்து கொண்டார். ரசிகர் துரத்த பிடிகொடுக்காமல் தோனி ஓட, அந்த வீடியோ வைரலானது.

அதை தொடர்ந்து, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்தது. சிஎஸ்கே கேப்டனான தோனி ஐபிஎல் போட்டிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டார். அப்போது உள்ளே நுழைந்த ரசிகர் ஒருவர் தோனியை தொட முயன்றார். பாலாஜிக்கு பின்னால் ஒளிந்துகொண்ட தோனி, பிடிகொடுக்காமல் ஓடத்தொடங்கினார். ரசிகரும் துரத்திக்கொண்டு ஓட பாதுகாவலர்களும் சேர்ந்து ஓடிக்கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் தோனி அந்த ரசிகருக்கு கைகொடுத்து அனைவரின் ஓட்டத்துக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் விரலாக பரவி வருகிறது.

(Visited 1 times, 1 visits today)