சந்த விக்ரமதுங்கவின் கொலை குற்றமில்லையா? 11 மாணவர்கள் கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்டு யுத்தம் என்ற போர்வையில் கொல்லப்பட்டமை குற்றமில்லையா? இவை தீர்க்கப்படவேண்டாமா? இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தேடிப்பார்க்கவேண்டும் என்று தொவித்த சுகாதாரம்,போசணைகள் மற்றும சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன கொலையாளிகள் தண்டிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார்.

கே: கனவுக் கோட்டைகளுக்கு கழிவறை அமைக்கும் வேலைத்திட்டமே தற்போது முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் என எதிர்க்கட்சித்தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தாரே?

ப: அவர்களது கனவு கோட்டைகள் அனைத்தும் இடிந்துபோயுள்ளன. அவர்களது கனவு கோட்டைகள் ஜனாதிபதியிலேயே தங்கியிருந்தன. அவ்வாறான கோட்டைகளை நிர்மாணித்துக் கொண்டுதான் வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிப்போம் என இருந்தனர். எனினும், வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பின் போது அதிகப்படியான வாக்குகளே கிடைத்திருந்தன.

கே: உற்பத்தி பொருளாதாரமொன்றே தற்போது நாட்டுக்கு தேவையாகவுள்ளது. எனினும், இந்த வரவு-செலவுத் திட்டத்தில் அதுகுறித்த எந்த தூரநோக்கையும் காணமுடியவில்லையே?

ப: அவ்வாறில்லை. இந்த வரவு செலவு திட்டம் உற்பத்தி பொருளாதாரத்துக்கானதொரு அடித்தளம் இடுகை. எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா என்பது முழுமையான உற்பத்தி செயற்பாடாகும். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு வேலைத்திட்டம் இருக்கிறது. நான் மீனைக் கொடுக்கவில்லை, மீனைப் பிடிப்பதற்கான இரையைத்தான் கொடுக்கிறேன் என அமைச்சர் மங்கள சமரவீர தனது வரவு öŒலவுத்திட்ட உரையில் தெரிவித்திருந்தார். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பு வதற்கான சிறந்ததொரு வரவு-செலவுத்திட்டத்தை இலங்கை வரலாறு கண்டிராது. இந்தத் திட்டத்தில் சுயதொழிலுக்கான ஊக்குவிப்புகள் இருக்கின்றன. இதுவே உற்பத்தி.

கே: சிறிய கார் குறித்த கனவை இந்த வரவு செலவுத்திட்டம் நிர்மூலமாக்கியுள்ளதே?

ப: ஒரு நாட்டுக்குத் தேவையான வாகனங்களின் எண்ணிக்கையை அந்நாட்டின் அரŒõங்கம் தீர்மானிக்கவேண்டும். சிங்கப்பூர் அவ்வாறான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது. இரண்டாவது வாகனத்தை வாங்கும்போது வரிகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படுகின்றன. அவ்வாறுதான் வாகன இறக்குமதி தொடர்பான கட்டுப்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

கே: இரண்டாம் வாசிப்பின்போது தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்திருந்தது. அவர்களது நிபந்தனைகள் என்ன?

ப: எந்த நிபந்தனைகளும் இல்லை. நான் தான் தொண்டமானுடனும் வாக்குத் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் எந்தக் கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. குறைந்தது பதவிக்காகவும் எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை. சிறந்த வரவு öŒலவுத்திட்டம் என்பதால்தான் ஆதரவாக வாக்களித்தேன் எனக் கூறினார். அதேபோலதான் தமிழ் தேசியக்கூட்டமைப்பும்.

வடக்கு அபிவிருத்திகளை துரிதப்படுத்துமாறு கேட்டுக்கொண்டனர். அடுத்தது, த.தே.கூ. எவ்வாறு வரவு செலவுத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும். வடக்குக்கும், கிழக்குக்குமான வேலைத்திட்டங்கள் அதில் பிரேரிக்கப்பட்டுள்ளன. வடக்கில் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்காக மாதாந்தம் 6000 ரூபா வழங்கப்படுகிறது. அவர்களது காணிப்பிரச்சினைகள் மற்றும் வடக்கில் வீடமைப்புகளை ஆரம்பித்துள்ளோம். இவ்வாறான வேலைத்திட்டங்களுக்காக பெருந்தொகையான நிதியொதுக்கீடு செதிருக்கின்ற நிலையில் அவர்கள் எவ்வாறு இதற்கு எதிர்ப்பை காட்டுவர்.

கே: அவர்கள் எந்த நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை என்று நீங்கள் கூறினாலும், எமக்கு நிபந்தனை இருக்கிறது என அவர்களது தலைமைகள் பகிரங்கமாகக் கூறினர். கல்முனைக்கு தனியான தமிழ் அலகு வேண்டும் எனக் கூறினர்?

ப: எங்கே? எங்கேயும் அவ்வாறு கூறவில்லை.

கே: எனினும், அவர்கள் ஊடகங்களிடம் அவ்வாறு கூறினார்களே?

ப: அதனை ஊடகங்கள் தானே தெரிவிக்கின்றன. ஒவ்வொருவர் கூறுபவற்றைதானே ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன. கல்முனைக்கு தனித்தமிழ் அலகு தேவை என எம்மிடம் எவரும் கோரிக்கைகளை முன்வைக்கவில்லை. இவை அனைத்தையும் ஊடகங்களே இடுகின்றன. இன்று கல்முனையில் த.தே.கூ. தமிழருக்கு தனி அலகு வேண்டும் எனத்தெரிவிக்கும் ஊடகங்கள், நாளை முஸ்லிம்களுக்கென முஸ்லிம் காங்கிரஸ் தனி அலகு கோருவதாக öŒ#திகளை வெளியிடும்.

கே: இது தொடர்பில் த.தே.கூட்டமைப்பு மு.காவுடன் பேச்சுவார்த்தைக்கும் தயாராகிவருகின்றது.

ப: அது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள். வடக்கு அபிவிருத்திகளை வரும் தேர்தலுக்கு முன்னதாக நிறைவுசெயவேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் த.தே.கூ. முன்வைத்தது.

கே: அவர்களின் மாற்றத்தை புரிந்துகொள்ள முடியாதுள்ளதே?

ப: எதிர்க்கட்சியிலுள்ள இனவாதிகளுக்கு எதிராகவே அவர்கள் அவ்வாறு மாறுகின்றனர். நான் சிங்கள பௌத்தர்களின் வாக்குகளால் மாத்திரமே ஜனாதிபதியாகுவேன் என கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார். அவ்வாறு கூறுபவர்களுக்கு எதிராக தமிழ் சமூகம் வாக்களிக்காமல் இருக்கமுடியுமா? கோட்டாபய தோற்பதற்காகவே களத்துக்கு வருகின்றார். ஏனைய அனைவரும் எம்முடன் இணைந்துகொண்டுள்ளனர்.

கே: குழுநிலை விவாதத்தின்போது, ஜனாதிபதிக்கான நிதியொதுக்கீட்டை தோற்கடிப்பதாக ஐ.தே.கவின் பின்வரி  பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருந்தனர். எனினும், எதுவும் நிறைவேறவில்லையே?

ப: ஜனாதிபதி எம்முடன் இணைந்து பாரியதொரு தீர்மானத்தை எடுத்தார். அவர்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் Œõர்பில், இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் அதற்கு Œõர்பாக வாக்களிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார். அதுமாத்திரமன்றி, வரவு செலவுத்திட்டம் சிறப்பாகவுள்ளதாகவும் கூறினார். இதில் தவறு இருப்பின் இதனைவிட சிறந்த வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்கவேண்டும் எனவும் கூறியிருந்தார். ஜனாதிபதி எம்முடன் சிறந்த புரிந்துணர்வுடன் செயற்படுகிறார். அவ்வாறிருக்கையில் அவருக்கான நிதியொதுக்கீட்டை நாம் எவ்வாறு எதிர்க்கமுடியும்.

கே: ஜனாதிபதியுடன் புதிய நட்பு கட்டியெழுப்பப்படுவதாகவா நீங்கள் கூறுகின்றீர்கள்?

ப: டிசம்பர் 20 ஆம் திகதி புதிய அரŒõங்கத்தை பொறுப்பேற்கும் போது அவர்களுடன் இணைந்து வேலை செவதற்குத் தயாராகவே இருந்தோம். அந்தப் புரிந்துணர்வு எதிர்காலத்தில் குறையுமா கூடுமா என்பதே கேள்வி. அரசியல் செயற்பாடுகளில் அவர்களுடன் எவ்வளவு தூரம் öŒல்லவேண்டும் என்பதை மாத்திரமே நாம் பார்க்கவேண்டும். ஒக்டோபர் 26 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் அவர் தற்போது சிறந்த நிலையிலேயே இருக்கிறார்.

கே: வழமைப்போல, யுத்தக்குற்றங்களை ஆராய சர்வதேச பொறிமுறையொன்று அவசியம் என்ற குரலே ஜெனீவாவில் கேட்கிறது. அரŒõங்கத்தின் நிலைப்பாடு என்ன?

ப: யுத்தக் குற்றம் என்பது என்ன? லசந்த விக்ரமதுங்கவின் கொலை, குற்றமில்லையா? உங்களை போன்றதொரு ஊடகவியலாளர் கொல்லப்பட்டார். அத்துடன் 11 மாணவர்கள் கப்பம் பெறும் நோக்கில் கடத்தப்பட்டு, யுத்தம் என்ற பேர்வையில் கொல்லப்பட்டமை குற்றமில்லையா? இவை தீர்க்கப்படவேண்டாமா? இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலும் தேடிபார்க்கவேண்டும். நான் நேற்று மஹிந்த சமரசிங்கவுடன் பேசினேன்.

அவர் கூறினார், ஜனாதிபதியின் குழு என்று தம்மைத் தனியாக அடையாளப்படுத்துவது தவறு என்று. நாடு என்ற வகையில் அது தவறு என்றார். ஏனென்றால், அவர் சுமார் 10 வருடங்களாக ஜெனீவா மாநாடுகளில் பங்கேற்கிறார். எனவே, அது தொடர்பில் சிறந்த புரிந்துணர்வு கொண்டவர் என்ற வகையில் அரசின் பிரேரணைகளுடனேயே நிற்கவேண்டும் என்று கூறுகிறார். நாட்டைப் பற்றிச் சிந்திப்பதாயின் அவ்வாறானதொரு நிலைப்பாட்டிலேயே இருக்கவேண்டும். எமது இந்த அரŒõங்கத்தினால் எம்மீதான குற்றச்செட்டுகள் குறைந்துள்ளன. அதனால் நாம் சர்வதேசத்துடன் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். எதுவும் நடக்கவில்லை என்று கூறினாலும் சர்வதேசம் அதனை ஏற்றுக்கொள்ளாது. அதனால் நாம் சர்வதேசத்துடன் இணைந்தே செயற்பட வேண்டும்;.

கே: யுத்தத்தின் கசப்பான சுவடுகளை மறப்போம். மன்னிப்போம் என்று தனது வடக்குக்கான விஜத்தின்போது, பிரதமர் ரணில், தெரிவித்தார். எனினும், தற்போது அரங்கேறுவது வேறொன்று?

ப: இல்லை. பழைய விடயங்கள் என்பது இவ்வாறான செயற்பாடுகளை அல்ல. யுத்தத்தின்போது எமக்கிடையில் இடம்பெற்ற சம்பவங்களையே அவர் குறிப்பிட்டார். அவற்றையே மறப்போம் என்றார். எனினும், கொலையாளிகள் தண்டிக்கப்படுவர்.

நன்றி: லங்காதீப

(Visited 1 times, 1 visits today)