போப் ஆண்டவர் பிரான்சிஸ்சின் நிதி ஆலோசகர் கார்டினல் ஜார்ஜ் பெல் (வயது 75). ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த இவர் போப் ஆண்டவரின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்.

40 வயதைக் கடந்து விட்ட 2 ஆண்கள், 1970-ஆம் ஆண்டுகளில் நீச்சல் குளம் ஒன்றில் வைத்து, கார்டினல் ஜார்ஜ் பெல், தங்களிடம் தவறாக நடந்ததாகவும், முறையற்ற விதத்தில் தொட்டதாகவும் புகார் கூறினர்.

இதே போன்று 1980-ம் ஆண்டுகளில் 3 சிறுவர்கள் முன்பாக ஜார்ஜ் பெல்,தன் முழு உடலையும் நிர்வாணமாக காட்டியவாறு நின்றார் எனவும் புகார் எழுந்துள்ளது.

மேலும், மெல்போர்ன் நகரில் ஆர்ச் பிஷப்பாக பணிபுரிந்தபோது, உள்ளூர் மத குருமார் மீது வந்த பாலியல் புகார்களை அவர் சரியான விதத்தில் கையாள வில்லை என்றும் புகார் கூறப்பட்டது.

இந்த வழக்கு குறித்த விசாரணை மெல்போர்ன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தீவிரமாக நடந்து வந்த நிலையில், இரு ஆண்களை துன்புறுத்தியதாக கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்தது.

(Visited 1 times, 1 visits today)