ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த பத்து வருடமாக ஜனநாயக வழியில் தமிழின நீதிகோரும் தமிழர்களின் போராட்டத்திற்கு எந்தவிதத்திலும் செவிசாய்க்காது தமிழின நீதியை மறுத்து வரும் சிறீலங்கா அரசுக்கு இனியும் கால அவகாசங்களை சர்வதேசம் வழங்கக்கூடாது எனகோரி தமிழர் தாயக பிரதேசங்களில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

அதன் இன்னொரு கட்டமாக எதிர்வரும் 16ம் நாள் வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் பெருமளவு மக்களை திரட்டி முன்னெடுக்கப்படவுள்ள பெரும் தமிழின நீதி கோரும் போராட்டத்திற்கு முன்னாயத்தமாக எழுச்சி ஊர்தி ஒன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு போராட்டத்திற்கு அனைவரையும் அழைக்கும் எழுச்சிகீதத்துடன் பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்கள் ,தெருக்கள், மக்கள் கூடும் இடங்கள், பேரூந்துகள் என சகல இடங்களிலும் துண்டுப்பிரசுரங்களை வழங்கிவருவதுடன் பொதுஅமைப்புகளுடன் கலந்துரையாடல்களையும் நடத்தி வருகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)