எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து,கென்யா தலைநகர் நைரோபிக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில்இ அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தில், கிரீஸ் நாட்டை சேர்ந்த அண்டோனிஸ் மவரோபெலோஸ் என்பவர் பயணம் செய்ய இருந்தார். ஆனால் அவர் விமான நிலையத்திற்கு 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் விமானத்தை தவறவிட்டார். இதனால் அவர் விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இது குறித்து தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர், “இது எனக்கு அதிர்ஷ்டமான நாள், நான் 2 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் என்னால் அந்த விமானத்தில் செல்ல முடியவில்லை. விமான நிலையத்தில் உள்ள அதிகாரிகளுடன் நான் அந்த விமானத்தில் செல்ல வேண்டும் என வாக்குவாதம் செய்தேன்.

ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. விமானம் கிளம்பிய 6 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். என் அதிர்ஷ்டத்தால் நான் பிழைத்துள்ளேன்” என கூறியுள்ளார்.

(Visited 1 times, 1 visits today)