2019/2021ம் ஆண்டுக்கான இலங்கை கிரிக்கட்டின் தலைவராக சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கட்டின் உறுப்பினர்கள் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று இடம்பெற்றது.

விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சம்மி சில்வா 83 வாக்குகளையும், ஜயந்த தர்மதாஸ 56 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

(Visited 1 times, 1 visits today)