மஸ்கெலியா பகுதியில் பெப்ரவரி 18 ஆம் திகதி இரவு காணாமல் போனதாக கூறபட்ட இளைஞன் இன்று  காலை 7 மணி அளவில் சடலமாக மீட்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 
கடந்த இரண்டு தினங்களாக மஸ்கெலியா பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடுல் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு, ரங்கல கடற்படையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட்டு குறித்த இளைஞனின் சடலம் மீட்கபட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காணாமல் போனதாக கூறப்படும் 30 வயதுடைய பெத்தும் மதுசங்க லியனகே, மஸ்கெலியா – மவுசாகலை நீர்தேக்கம் பக்கம் சென்ற காட்சி அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் பொருத்தபட்டிருந்த சி.சி.ரி.வி கேமராவில் பதிவாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை அடுத்து காணாமல்போன இளைஞனின் உறவினர்கள் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் 19 ஆம் திகதி இரவு முறைபாடு ஒன்றை பதிவு செய்தனர்.

19 ஆம் திகதி இரவு குறித்த இளைஞனுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் அழைப்பு வந்த பிறகு குறித்த இளைஞன் வெளியில் சென்றதாகவும் வெளியில் சென்ற இளைஞனை காணவில்லை எனவும் முறைபாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனின் பாதனி ஒன்று மவுசாகலை நிர்தேக்கத்திற்க்கு அருகாமையில் கிடந்ததை இளைஞனின் உறவினர்களால் இனங்காணபட்டமை அடுத்து மாவுசாகலை நீர்தேக்கத்தில் குறித்த இளைஞன் பாய்ந்து இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் நீதவான் தலைமையில் மரண விசாரனைகள் இடம்பெற்றதுடன் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோத​ணைக்காக சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் சடலமாக மீட்கபட்டமைக்கு காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

(Visited 1 times, 1 visits today)