விஜய் நடிக்க முடியாமல் போன திரைப்படம் 175 நாட்கள் ஓடி சாதனை படைத்தது குறித்து அப்படத்தின் இயக்குனர் ட்வீட் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும்.

அப்படி இருந்தும் இவர்களாலும் ஒரு சில படங்களில் நடிக்க முடியாமல் போகும் வாய்ப்பும் உண்டு. அப்படி கால்ஷீட் பிரச்சனையால் விஜய் நடிக்க முடியாமல் போன திரைப்படம் தான் ஆட்டோகிராப்.

சேரன் இயக்கி நடித்திருந்த இந்த படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தார். அவர் நடிக்க முடியாததால் சேரனே நடித்து தியேட்டர்கள் கிடைகாமல் குறைந்த தியேட்டர்களிலேயே ரிலீஸானது.

ஆனால் அதன் பின்னர் மக்கள் மத்தியில் கிடைத்த பெரும் வரவேற்பால் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதுமட்டுமில்லாமல் 175 நாட்கள் ஓடியும் இப்படம் சாதனை படைத்தது.

நேற்று அதாவது பிப்ரவரி 19-ம் தேதி இப்படம் வெளியானது என்பதால் சேரன் இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துளளர்.

(Visited 1 times, 1 visits today)