கொக்கேன் பயன்படுத்தும் அமைச்சர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் வைத்து இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தலைமையில் நான்கு உறுப்பினர்கள் கொண்டதாக இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் விமர்ஷன அறிவிக்கை ஐ.தே.க.யின் நிறைவேற்றுக் குழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)